தாய்லாந்தில் குடிபோதையில் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் எப்படி தங்கள் அறைக்குள் நுழைந்தார் என்பதை அதிர்ச்சி விலகாமல் மனைவி விளக்கியுள்ளார்.
மேற்கு லண்டனை சேர்ந்தவர் அமித்பால் சிங் பஜாஜ். இவர் தனது மனைவி பந்தனா கவுர் மற்றும் 2 வயது மகனுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றார்.
அங்குள்ள செண்டாரா கிராண்ட் நட்சத்திர ஹொட்டலில் பஜாஜின் குடும்பத்தினர் தங்கினார்கள்.
அப்போது அவர்கள் தங்கியிருந்த அறையின் பக்கத்து அறையில் இருந்த ரோஜர் புல்மன் (53) குடிபோதையில் கத்தி கொண்டிருந்தார்.

இது பஜாஜின் குடும்பத்துக்கு மிகவும் தொந்தரவாக இருந்தது, இந்த சமயத்தில் பால்கனி வழியாக பஜாஜ் தங்கியிருந்த அறைக்குள் நுழைய முயன்ற புல்மன் கதவை வேகமாக தட்டியுள்ளார்.
பின்னர் அறை உள்ளே நுழைந்த போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டதில் பஜாஜ், புல்மனை தோள்பட்டையில் கத்தியால் குத்தினார்.
இதையடுத்து புல்மன் பஜாஜை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த பஜாஜின் மனைவி பந்தனா கூறுகையில், பால்கனி வழியாக நிர்வாண நிலையில் எங்கள் அறைக்குள் புல்மன் வந்தார்.
கத்தியபடி ஆக்ரோஷமாக இருந்த அவர் என் கணவரிடம் சண்டை போட்டார், அப்போது என்னையும், என் மகனையும் அவர் நெருங்க முயன்றார்.

இதையடுத்து எங்களை காப்பாற்ற முயன்ற பஜாஜ், புல்மன் எங்களை நெருங்க விடாமல் தடுத்தார், மேலும் அங்கிருந்து எங்களை சென்றுவிடுமாறு கத்தினார்.
இதையடுத்து ஹொட்டலின் கீழ் தளத்தில் உள்ள மரத்தின் அருகில் நானும் என் மகனும் பதுங்கினோம், பின்னர் வரவேற்பு அறைக்கு தகவல் கொடுத்தோம், இதையடுத்து பஜாஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்த தகவல் எனக்கு கிடைத்தது.
எங்களை காப்பாற்றுவதற்காக தான் என கணவர் தனது உயிரை விட்டுள்ளார், அவர் எங்களின் ரியல் ஹீரோ என கூறியுள்ளார்.

இதனிடையில் கைது செய்யப்பட்ட புல்மன், பஜாஜை கொலை செய்ய வேண்டும் என நினைக்கவில்லை, அவர் இறந்துவிட்டார் என்பதை கருதவில்லை என கூறியுள்ளார்.
பிரித்தானிய வெளியுறவுதுறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், உயிரிழந்த பிரித்தானியர் பஜாஜின் குடும்பத்துக்கு ஆதரவாக உள்ளோம், இதோடு இந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து அதிகாரிகளுடனும் தொடர்பில் உள்ளோம் என கூறியுள்ளார்.