உன் மனைவியை நான் அழைத்து செல்கிறேன்! வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த நபரால் கணவருக்கு தெரிந்த உண்மை

தமிழகத்தில் மனைவியை தன்னுடன் அழைத்து சென்றுவிடுவதாக கூறிய இளைஞரை கணவன் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையின் திருச்சுளை பகுதியை சேர்ந்தவர் கேசவமூர்த்தி (25). இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தனர்.இந்த விவகாரம் தெரிய வந்ததும் அந்த பெண்ணின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தனது மகளை திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் (32) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

திருமணத்திற்கு பிறகு பிரகாஷ் தனது மனைவியுடன் திருப்பூரின் வெங்கமேடு பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற கேசவமூர்த்தி விடுமுறைக்கு வரும்போதெல்லாம் தனது முன்னாள் காதலியை சந்தித்து பேசி வந்தார்.
இதையடுத்து கடந்த 3 மாத விடுமுறையில் ஊருக்கு வந்த கேசவமூர்த்தி திருப்பூருக்கு வந்து முன்னாள் காதலியின் கணவர் பிரகாஷ் வேலை செய்த பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்னர் பிரகாஷூம், கேசவமூர்த்தியும் சேர்ந்தே மது குடிக்கும் அளவில் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சம்பவத்தன்று கேசவமூர்த்தியும், பிரகாஷ் மற்றும் அவருடைய நண்பர் மணீஸ்குமார் ஆகியோர் சேர்ந்து மது குடித்தனர்.

அப்போது கேசவமூர்த்திக்கும் பிரகாஷ் மனைவிக்கும் இடையேயான பழக்கத்தை மணீஸ்குமார் பிரகாஷிடம் கூறி உள்ளார். இதுகுறித்து பிரகாஷ், கேசவமூர்த்தியிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கேசவமூர்த்தி, பிரகாஷிடம் உன் மனைவியை நான் அழைத்து சென்று விடுவேன் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் தான் வைத்திருந்த கத்தியால் கேசவமூர்த்தியை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த கேசவமூர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post