அவளுடன் தொடர்பு! மனைவி தான் என் சாவுக்கு காரணம்.. தற்கொலை செய்து கொண்ட கணவன் எழுதிய உருக்கமான கடிதம்

இந்தியாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன், மனைவி தான் தனது இறப்புக்கு காரணம் என கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.

புது டெல்லியின் நியூ அஷோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சனித்குமார் (34). மென்பொருள் பொறியாளரான இவர் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார்.
பின்னர் தனியறைக்குள் சென்ற சனித்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், அங்கு வந்து பார்த்த அவர் மனைவி ஜோதி கணவரின் நிலை கண்டு அலறி துடித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சனித்குமாரின் சடலத்தை கைப்பற்றியதோடு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.அதில், என்னுடன் பணிபுரியும் பெண்ணுடன் நட்பாக பழகிவந்தேன், ஆனால் என் மனைவி நான் அவருடன் தொடர்பு வைத்துள்ளாக சந்தேகப்பட்டு என்னுடன் சண்டை போட்டு வந்தாள்.

இது தொடர்பாக பொது இடத்தில் வைத்து என்னை அவமானப்படுத்தினாள், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் இம்முடிவை எடுக்கிறேன் என எழுதியுள்ளார்.
இதனிடையில் சனித்குமாரின் தந்தை அனில் பொலிசில் அளித்துள்ள புகாரில், சனித்குமாரின் மனைவியும், மாமியாரும் சில ஆண்டுகளாகவே அவரை துன்புறுத்தி வந்தார்கள்.

இதனால் தான் அவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான், இதற்கு காரணமான அந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Previous Post Next Post