தேன் குரலில் ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண்கள்: நம்பி சென்றவருக்கு நேர்ந்த கதி!

தாங்கள் அழைக்கும் இடத்திற்கு வந்தால் அழகிய பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற ஆசை வார்த்தையை நம்பிச் சென்ற மூவர், போட்டிருந்த உடைகளையும் இழந்து உள்ளாடைகளுடன் பரிதாபமாக திரும்பிய சம்பவம் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் நடந்துள்ளது.

இரண்டு பெண்கள் ஆசை வார்த்தை கூறி குறிப்பிட்ட வீட்டுக்கு வருமாறு அழைக்க, மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மூன்றுபேர் அதை நம்பி அந்த பெண்களை சந்திக்க சென்றுள்ளார்கள்.




வாசலில் நின்று கவர்ச்சியாக வரவேற்ற இளம்பெண்களைக் கண்டு மயங்கி, பாலியல் இன்பம் கிடைக்கும் என்று எண்ணி அந்த ஆண்கள் செல்ல, வீட்டுக்குள் சென்றதும் கதவை மூடிவிட்டு அவர்கள் எதிர்பாராத ஒன்றைக் கொடுத்தார்கள் பெண்கள்.



ஆம் அவர்கள் கதவை மூடியதும், வீட்டுக்குள் தயாராக இருந்த மூன்று ஆண்கள் அவர்களை அடித்து உதைத்து, பணம், மொபைல் போன், வாகனங்கள் என எல்லாவற்றையும் பறித்துவிட்டு அடித்து உதைத்து துரத்தியிருக்கிறார்கள்.




பணம் இல்லாதவர்களை பிடித்து வைத்துக் கொண்டு அடித்து உதைத்து சித்திரவதை செய்து, ATMஇல் பணம் எடுத்து கொடுக்காவிட்டால், அவர்களது குடும்பத்தினரை தாக்கப்போவதாக மிரட்டியும் பணம் பறித்துள்ளனர்.


பின்னர் அவர்களை எங்காவது காரில் கொண்டு இறக்கி விட்டு சென்று விடுவார்கள் அந்த ஆண்கள்.

தற்போது இந்த சம்பவங்கள் தொடர்பாக Thomas Nolasco, Joshua Rodriguez, MelissaLong மற்றும் Carina Bailon என்னும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக இருக்கும் James T. Smith என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Previous Post Next Post