கணவனை துண்டு துண்டாக வெட்டி வாளியில் உடலை அடைத்த மனைவி... திடுக்கிடும் பின்னணி தகவல்

இந்தியாவில் முதியவரை அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பக்கெட்டில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் மாருதி கிருஷ்ணா (80). ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மாதா மாதம் ரூ 30,000 ஓய்வூதியம் கிடைத்து வந்தது.




இந்நிலையில் இந்த ஓய்வூதிய பணத்தை தாங்கள் பெறுவதற்காக மாருதியின் மனைவி கயா, மகள் பிரபுலா மற்றும் மகன் கிஷன் ஆகியோர் சேர்ந்து மாருதியை கொலை செய்ய முடிவெடுத்தனர்.

இதையடுத்து அவரை எந்த வழியில் கொலை செய்யலாம் என இணையத்தில் தேடிய போது datura பவுடர் என்னும் விஷ பவுடரை உணவில் கலந்து கொடுத்தால் ஒருவர் இறந்துவிடுவார் என தெரியவந்தது.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை மாருதிக்கு உணவில் அந்த விஷத்தை கலந்து கொடுத்த நிலையில் அதை சாப்பிட்ட அவர் உயிரிழந்தார்.



இதன் பின்னர் மூவரும் சேர்ந்து கத்தியால் மாருதியின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பக்கெட்டில் போட்டனர்.




அதை வெளியில் எடுத்து கொண்டு போய் அப்புறப்படுத்திவிடலாம் என அவர்கள் நினைத்த நிலையில் பக்கத்தில் வீட்டில் திருமணமும், அருகில் உள்ள வீடுகளில் பக்ரீத் பண்டிகையும் கொண்டாடப்பட்டதால் அதிகளவு மக்கள் இருந்தனர்.

இதனால் சடலத்தை அவர்களால் வெளியில் எடுத்து செல்ல முடியவில்லை.

இதையடுத்து சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதையடுத்து அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பக்கெட்களில் மாருதியின் சடலம் துண்டுதுண்டாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து சடலம் கைப்பற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கயா, பிரபுலா, கிஷன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post