இரண்டு ஆண்களுடன் நெருக்கம் காட்டிய ஆசைநாயகி.. வீட்டு படுக்கையறையில் நடந்த நிகழ்வால் நேர்ந்த விபரீதம்

தமிழகத்தில் ஆசைநாயகிக்காக நடந்த போட்டியில் ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் சங்கர்லால். சிதம்பரம் பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவர், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே மர்மகும்பலால் தலை சிதைத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரித்து வந்த நிலையில் பல்லடத்தைச் சேர்ந்த ரவுடி ஒத்தகை ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பல், நீதிமன்றத்தில் சரணடைந்தது.




கொலை செய்யப்பட்ட சங்கர்லால் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்ததால், பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஆசை நாயகி என்ற ஒரு பெண்ணுக்காக ஏற்பட்ட மோதலில், சங்கர்லால் கொல்லப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.



சங்கர்லால், ராஜா இருவரும் கூட்டாளிகள். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஆசை நாயகி என்கிற அருணாவை காதலித்துள்ளனர்.

அந்த பெண் இருவரிடமும் நெருங்கிப் பழகியுள்ளார். இதில் ஆசைநாயகியை யார் ஆஸ்தான நாயகியாக்கிக் கொள்வது என்று இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ராஜாவின் கையை சங்கர்லால் வெட்டியுள்ளார்.




இந்த சம்பவத்திற்கு பின்னர் ராஜா பல்லடத்தில் தங்கி இருந்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில் சங்கர்லாலை பழிக்குப் பழிவாங்க ராஜா திட்டமிட்டார்.

இந்த சூழலில் கடந்த திங்கட்கிழமை சங்கர்லாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் ஆசை நாயகி வீட்டு படுக்கையறையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது.

இந்த தகவல் அறிந்து ஆவேசப்பட்ட ராஜா, மறுநாள் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே வைத்து, சங்கர்லாலை கூலிப்படையினருடன் சேர்ந்து கொன்றது தெரியவந்துள்ளது.

இதனிடையில், இதில் சம்பந்தப்பட்ட பெண்ணையும் பிடித்து விசாரிக்க பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
Previous Post Next Post