அழுது கொண்டே தந்தையிடம் மகள் கூறிய அந்த விடயம்.. அதை கேட்டு தந்தை செய்த செயலால் நேர்ந்த விபரீதம்

தமிழ்நாட்டில் மகளை மிக மோசமாக கிண்டல் செய்த இளைஞர்களை தட்டி கேட்ட தந்தை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவருக்கும் ஹேமலதா என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படித்து வரும் மணிகண்டனின் மூத்த மகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது மகேஸ்வரன் என்பவர் அவரை மோசமாக கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி மணிகண்டன் மற்றும் தாய் மாமா மகாதேவனிடம் இது பற்றி கலங்கியபடி கூறினார். அதற்காக மகேஸ்வரனை இருவரும் கண்டித்துவிட்டு வந்துள்ளனர்.அதை தொடர்ந்து நேற்று மாலை மணிகண்டனை வந்து சந்தித்த மகேஸ்வரன் , மீனாட்சி சுந்தரம், மாரி ஆகிய மூவரும் உன்னைக் கொல்லாமல் விட மாட்டோம் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து 13ஆம் திகதி வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மணிகண்டனை போதையில் இருந்த மகேஸ்வரனும் அவரது நண்பர்களும் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Previous Post Next Post