பெற்ற மகளுடன் என் கணவருக்கு உறவு.. கர்ப்பமாக்கினார்! மனைவியின் புகார் குறித்து வெளியான உண்மை நிலவரம்

சென்னையில் மகளுடன், கணவர் தொடர்பு வைத்துள்ளதாக பொய் புகார் கொடுத்த மனைவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த தம்பதி பாபு-கலா. இவர்களுக்கு, கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் 11 மற்றும் ஒன்றரை வயதில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இரு மகள்களுடன், பாபு தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கலா பொலிசில் அளித்த புகாரில், 11 வயது மகளுடன், என் கணவர் பாலியல் தொடர்பு வைத்துள்ளார்.

இதை பார்த்த நான், கணவரை கடுமையாக கண்டித்தேன். ஒரு கட்டத்தில் என் மகள் கர்ப்பம் அடைந்தாள். அந்த கருவை மருந்து கொடுத்து கலைத்து விட்டேன். என் கணவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பாபு மீது பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் கூறுகையில், இது ஒரு துரதிருஷ்டவசமான வழக்கு. கணவரை பழிவாங்க, பெற்ற மகளை கற்பழித்தார் என்ற பயங்கரமான குற்றச்சாட்டை கணவர் மீது மனைவி சுமத்தியுள்ளார். அவரது மகள் இங்கு ஆஜராகி, தன் தாயார் பொய்யான புகாரை கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.மேலும், தானும், தன் தங்கையும் தந்தையுடன் வசிப்பதாகவும், தங்களை தந்தையிடம் இருந்து பிரித்து, தன்னுடன் அழைத்து செல்வதற்காக இப்படி ஒரு பொய் புகாரை தாயார் கொடுத்துள்ளதாகவும், தானும், தன் தங்கையும் தந்தையுடன் வாழவே விரும்புவதாக தெளிவாகவும் அவள் கூறியுள்ளார்.
இந்த வழக்கு என்னுடைய மனசாட்சியையே உலுக்கிவிட்டது. மகள்களை தன்னுடன் அழைத்து செல்வதற்காக, பெற்ற மகளுடன், கணவர் பாலியல் உறவு வைத்துள்ளார் என்று புகார் செய்யும் அளவுக்கு ஒரு தாய் செல்வாரா? என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.இதன் மூலம் போக்சோ சட்டத்தை எந்த அளவுக்கு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்? என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இப்படி ஒரு பொய் புகாரை கொடுத்த கலா மீது போக்சோ சட்டப்பிரிவு 22-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.
Previous Post Next Post