திருச்சியில், திருமணம் முடிந்து கல்லூரிக்கு திரும்பிய மருத்துவ மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் அம்புஜவல்லி பேட்டையை சேர்ந்த கயல்விழி திருச்சி கே.ஏ.பி. விஷ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரியில், எம்.எஸ் படித்து வந்தார்.
அண்மையில், இவருக்கு சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் மருத்துவ படிப்பு பயின்று வரும் சக்தி கணேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

சுமார் 40 நாட்கள் திருமண விடுப்புக்கு பின் கல்லூரி திரும்பிய கயல்விழி, யாருடன் அதிகம் பேசாமல் தனியாகவே இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், இன்று காலை தனியறையில் தங்கியிருந்த கயல்விழியை கல்லூரிக்கு அழைத்து செல்ல அவருடன் படிக்கும் மாணவிகள் வந்தபோது அறை பூட்டப்பட்டிருந்துள்ளது.
வெகுநேரம் கதவை தட்டியும் திறக்காததால், மாணவிகள் சந்தேகத்துடன் கதவை உடைத்து திறந்தபோது, கயல்விழி தூக்கில் தொக்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள்,பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் திருச்சி வந்த கயல்விழி பெற்றோர் அவரது உடலில் காயமிருப்பதாகவும், மகள் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் தற்கொலை கடிதம் எதுவும் சிக்காததால், அதிகாரிகள் அதுகுறித்து பொலிசார் தீவிரவிசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.