இந்தியாவிலிருந்து மனைவி வெளிநாட்டுக்கு செல்வதை தடுக்க கணவன் செய்த மோசமான செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியை சேர்ந்தவர் நசீருதின் (29). இவர் சென்னையில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நசீருதின், ரபியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்ல ரபியா முடிவு செய்தார். ஆனால் இது நசீருதினுக்கு பிடிக்காத நிலையில் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் இதை கேட்காத ரபியா டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் வந்தார்.
அப்போது மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் விமான நிலையத்துக்கு போன் செய்த நசீருதின், ரபியா தற்கொலைப்படை தாக்குதல்தாரி எனவும் சவுதி அல்லது துபாய் விமானத்தில் அவர் ஏறினால் விமானம் வெடிக்கும் எனவும் கூறினார்.
மனைவி வெளிநாடு செல்வதை தடுக்கவே இந்த செயலை செய்தார் நசீருதின்.
இதையடுத்து உஷாரான விமான நிலைய அதிகாரிகள் இது குறித்த சோதனையில் இறங்கிய போது நசீருதின் வேண்டுமென்றே இப்படி செய்தார் என கண்டுபிடித்தனர்.
இதையடுத்து நசீருதின் கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது