ஆபாச படங்களுக்கு அடிமை! மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை.. அடுத்தடுத்து வெளியான தகவல்

இந்தியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள பிரசாந்த் நகரை சேர்ந்தவர் பரமேஷ் (38). இவர் தனது 13 வயதான வளர்ப்பு மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.இது குறித்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
ஆனால் அந்த சிறுமி இது குறித்து தனது தாயிடம் கூற அதிர்ச்சியடைந்த அவர் பொலிசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து பொலிசார் பரமேஷை கைது செய்தனர், விசாரணையில் அவர் ஆபாச படங்களுக்கு அடிமையானவர் என்ற பகீர் தகவல் வெளியானது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பரமேஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Previous Post Next Post