நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு கணவன் செய்த செயல்! அதிர்ச்சியில் உறைந்த மனைவி

தமிழகத்தில் மனைவி கண்முன்னே கணவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

வேலூரின் கணியம்பாடி மாரியம்மான் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார்(வயது 32), ராணுவ வீரர். இவருக்கும் புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த யூலை மாதம் 11ம் திகதி திருமணம் நடந்தது.திருமணமான நாளிலிருந்தே இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால் அடிக்கடி சண்டையும் நடந்தது.

இந்நிலையில் இன்று இருவரும் பைக்கில் ஒன்றாக சென்று கொண்டிருக்கும் போது மீண்டும் சண்டை வந்துள்ளது.

இதனால் ஆத்திரத்திரமடைந்த மகேஷ்குமார், கலெக்டர் அலுவலகத்தின் மேம்பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு திடீரென கீழே குதித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியில் இருந்த புவனேஸ்வரி, கீழே வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் பரிதாபமாய் இறந்து கிடந்தார்.

கணவனின் நிலையை பார்த்து மேலும் கதற, அங்கு வந்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் எதிர்பாராதவிதமாக நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Previous Post Next Post