15 வயது மகளை அடித்து உடையை கிழித்து அரைநிர்வாணமாக்கிய தந்தை.. பதறவைக்கும் வீடியோ வெளியானது

இந்தியாவில் பெற்ற மகளை பாலியல் தொழிலில் தள்ள வற்புறுத்தி, பொதுவெளியியில் அவரது ஆடைகளை கிழித்து கண்மூடிதனமாக தாக்கிய தந்தையின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தின் மொவமாரி கிராமத்தை சேர்ந்தவர் ஜமாலுதின். இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். ஜமாலுதீனுக்கு பாலியல் தொழில் செய்யும் கும்பலுடன் தொடர்பு உள்ளது.



இதனால் தனது 15 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு ஜமாலுதீன் வற்புறுத்தி வந்துள்ளார்.

இதற்கு மகள் சம்மதிக்காத நிலையில் அவரை தினமும் அடித்து துன்புறுத்தினார்.




இந்நிலையில், சம்பவத்தன்றும் மகளை ஜமாலுதின் வற்புறுத்த சிறுமி வழக்கம் போல மறுக்கவும், ஆத்திரமடைந்த தந்தை தெருவுக்கு இழுத்து வந்தார் சிறுமியை.


அங்கே ஊர் மக்கள் முன்னிலையில், சகட்டுமேனிக்கு சிறுமியை அடித்து உதைத்ததில் அவர் துணியெல்லாம் கிழிந்து தொங்கி அரை நிர்வாண கோலத்துக்கு ஆளானாள்.




ஆனால் இதையெல்லாம் அந்த கிராம மக்கள் வேடிக்கை தான் பார்த்து கொண்டிருந்தார்களே தவிர, ஒருவரும் தடுக்கவில்லை.

பின்னர் இது குறித்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ஜமாலுதீன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கவலைக்கிடமான நிலையில் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜமாலுதின் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு மொத்தம் 3 மனைவிகள். இந்த 3 பேரையுமே பாலியல் தொழிலில் ஈடுபட கூறியும் மறுத்த அவர்கள் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.

அதனால் தான் மகளை தொழிலில் தள்ள விரும்பினேன் என கூறி அதிரவைத்துள்ளார்.
Previous Post Next Post