திருமணமான 45 நாட்களில் மனைவியை விட்டு வெளிநாட்டிற்கு சென்ற கணவன்! வீடியோவில் காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் திருமணமான 45 நாட்களில் புதுமணப் பெண் தோழியுடன் நகைகள் மற்றும் பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சானாஊரணியை சேர்ந்தவர் ஆரோக்கிய லியோ. இவருக்கும் வினிதா(19) என்பவருக்கும், கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.திருமணம் ஆன 45 நாட்களிலே லியா வேலைக்காக வெளிநாட்டிற்கு அதாவது சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். இதையடுத்து வீட்டில் இருந்த வனிதாவிற்கு, திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அபி என்ற பெண் டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்திருக்க, இது நாளைடைவில் வனிதாவிற்கும் பிடித்து போனதால், இரண்டு பேரும் டிக் டாக் செய்துள்ளனர்.

இவர்களது டிக்டாக் வீடியோக்களை பார்த்த ஆரோக்கிய லியோ, தனது மனைவிக்கு போன் போட்டு கண்டித்துள்ளார்.

ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து அபியுடன் பழகி வந்தார். இவர்களது பழக்கம் நாளடைவில் நெருக்கமானது.

மேலும், வினிதா, அபியின் படத்தை தனது கையில் டாட்டூ வரைந்து கொண்டதால், இதை வீடியோகாலில் பார்த்த ஆரோக்கிய லியோ அதிர்ச்சியடைந்தார்.

இதனால் உடனடியாக சிங்கர்ப்பூரில் இருந்து வந்த லியா, வீட்டை பார்த்த போது, அபி அனுப்பிய ஏராளமான பரிசுப் பொருட்கள் இருப்பதை கண்டுள்ளார்.
மேலும் வேலை பார்த்து அனுப்பிய பணம், திருமணத்தின்போது வினிதா அணிந்திருந்த 20 பவுன் நகைகளும் மாயமாகியிருந்ததால், இது குறித்து கேட்ட போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற லியா மனைவியை அவருடைய பெற்றோர் வீட்டில் நடந்தவற்றை எல்லாம் கூறி விட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து கடந்த 19-ஆம் திகதி வனிதா திடீரென மாயமாக, வீட்டிலிருந்த 25 பவுன் நகை, பணங்களை எடுத்து வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

இதனால் கணவர் இது குறித்து புகார் தெரிவித்ததால், வனிதா மற்றும் அபி இரண்டு பேரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

Previous Post Next Post