மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவன்... அதிர வைக்கும் வாக்குமூலம்

கோவையில் மனைவியை கொலை செய்துவிட்டு கானாமல் போய்விட்டதாக நாடகமாடிய கணவரை பொலிசார் கைது செய்யுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சிஅருகேயுள்ள பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கவுசல்யா.இந்நிலையில், சக்திவேல் பூச்சிமருந்து அடிக்கும் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில், 7 வயதில் மகள் உள்ளார்.

இதைத்தொடர்ந்து, சக்திவேல் தனது மனைவி கவுசல்யா கானாமல் போய்விட்டதாக பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

புகாரைப் பெற்ற பொலிசார் கவுசல்யாவை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு வரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் போலீசாரின் சந்தேகம் சக்திவேல் பக்கம் திரும்பியது.

சக்திவேலிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறியுள்ளார்.
இதனால், பொலிசார் தங்கள் பானியில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கவுசல்யாவை கொலை செய்து சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளார் சக்திவேல்.

இதனால், அதிர்ச்சியடைந்த பொலிசார், தொடர்ந்து விசாரணை நடத்தியதில், திருமணம் ஆன சில வருடங்களில் கவுசல்யாவின் நடத்தையில் மாற்றம் இருந்ததாகவும் இது குறித்து நான் கேட்கும் போதெல்லாம் தன்னுடன் சண்டையிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனால் தங்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார் சக்திவேல்.
இந்நிலையில் கடந்த யூலை 26ம் தேதி எங்களுக்குள் ஏற்பட்ட சண்டை கைகலப்பாக மாறியது என தெரிவித்த சக்திவேல், அப்போது நான் அடிக்க முயன்றபோது கவுசல்யா தப்பிக்க முயன்றார். இதனால் நான் அருகிலிருந்த கல்லை எடுத்து வீசினேன். அது கவுசல்யாவை தாக்கி அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவளது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டேன்.

பின்னர் மனைவியின் சடலத்தை சாக்குப் பையில் கட்டி அருகில் உள் பாழுங் கிணற்றில் போட்டுவிட்டு விட்டு காணாமல் போய்விட்டதாக போலீசில் புகார் அளித்ததாக ஒப்புக்கொண்டார் கணவர்.

தாய் இறந்து விட தந்தை ஜெயிலுக்கு செல்ல 7 வயது மகள் ஆதரவின்றி தவிக்கிறது.
Previous Post Next Post