கல்லூரி பேராசிரியையை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டிய மாணவர்: பின்னர் நடந்த பகீர் சம்பவம்

தமிழகத்தின் சென்னை அருகே கல்லூரி பேராசிரியையை கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிர்வாணப்படுத்தி, உல்லாசத்திற்கு கட்டாயப்படுத்திய கல்லூரி மாணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 23 வயதான விவேஷ் சென்னை அம்பத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபடி காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் பல்கலைகழகத்தில் பொறியியல் படித்து வந்துள்ளார்.

அதே பல்கலைககழத்தில் உதவி பேராசிரியையாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வந்தார்.
விவேஷும் உதவி பெண் பேராசிரியையும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

கடந்த 6 மாதமாக நண்பர்களாக பழகி வந்த நிலையில், விவேஷ் தன்னுடைய படிப்பு நிறைவு பெறுவதாகவும், அதற்காக பார்ட்டி தருவதாக பேராசிரியையை கடந்த 19 ஆம் திகதி வெளியே அழைத்துள்ளார்.

ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையிலும், தன்னைவிட வயது குறைந்தவர் என்ற வகையிலும் தைரியாமாக அவருடன் அந்த பேராசிரியை வர சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்துள்ளார்.

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அருகே இருள்சூழ்ந்த பகுதிக்குள் திடீரென வாகனத்தை நுழைத்துள்ளார்.
இங்கே எதற்கு என கேட்டபோது, உள்ளே ஒரு விடுதி இருப்பதாகவும், அங்குதான் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். பின்னர் சிறிது தூரம் சென்ற பிறகு இருள் சூழ்ந்த பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சவுக்குமரம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆள்அரவம் அற்ற அந்த பகுதிக்கு சென்ற உடன் தனது வக்கிர புத்தியை காட்டத் தொடங்கியுள்ளார்.

மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி உடைகளை களையுமாறு பேராசியையை வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன அந்த பேராசிரியை விவேஷ் இடம் கெஞ்சியுள்ளார். ஆனால் விடாத விவேஷ் பேராசிரியை நிர்வாணப்படுத்தி அதை செல்போன் டார்ச் வெளிச்சத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டிவிட்டு பேராசிரியையை மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துவந்து விடுதியில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

அடுத்த நாள் பேராசிரியைக்கு போன் செய்த விவேஷ், தன்னோடு உல்லாசமாக இருக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இல்லாவிட்டால் நிர்வாண வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன பேராசிரியை, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் தைரியமாக புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிசார் விவேஷிடம் சந்தேகம் வராத வகையில் தொடர்ந்து பேசுமாறு அறிவுரை வழங்கினர்.

அதன்படி விவேஷிடம் பேசிய பேராசிரியையை கோயம்பேடு பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற பேராசிரியையை பார்க்க வந்த விவேஷை மறைந்திருந்த பொலிசார் கையும் களவுமாக பிடித்தனர்.

அவரின் மொபைல் போனை பறிமுதல் செய்து, அதில் இருந்த பேராசிரியையின் நிர்வாண வீடியோவை அழித்தனர்.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பேராசிரியைக்கு சென்னையில் யாரும் இல்லாததால், புகார் அளிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் அத்துமீறியதாக கூறியுள்ளார்.
Previous Post Next Post