குளிக்க சென்ற தாய்... பின் தொடர்ந்து சென்ற மகன் செய்த கொடூர செயல்... வீட்டுக்குள் வந்த மகள் அதிர்ச்சி

தமிழகத்தில் பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் மனைவி சாந்தி (52).

இவர்களுக்கு மனோன்மணி (29) என்ற மகளும், குமரவேல் (28) என்ற மகனும் உள்ளனர். குமரவேலுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் வீட்டின் மாடியில் மனைவியுடன் வசித்து வருகிறார். ஹரிதாஸும், சாந்தியும் கீழ் தளத்தில் வசித்து வருகிறார்கள்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான குமரவேல் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த 20-ம் திகதி தனது தாய் சாந்தி குளிக்க சென்றபோது, அவரை பின் தொடர்ந்த குமரவேல் அவரது கழுத்தில் துண்டை சுற்றி நெரித்து கொலைசெய்து விடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் இருந்து சாந்தியை வீட்டார் காப்பாற்றி உள்ளனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஹரிதாஸ் கண் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி சென்ற நிலையில் குமரவேலின் மனைவி யோகதீபா தனது தாய் வீட்டுக்கு குழந்தையை தூக்கி கொண்டு சென்று விட்டார்.

வீட்டில் குமரவேலும், அவரது தாய் சாந்தியும் மட்டும் இருந்துள்ளனர். சிறிது நேரத்தில் குமரவேல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். நேற்று முன்தினம் பகல் குமரவேலின் சகோதரி மனோன்மணி தனது தாய் சாந்தியை பார்க்க வீட்டுக்கு வந்தார். ஆனால் வீடு பூட்டிக் கிடந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை.
குமரவேலிடம் விசாரித்தபோது, அவர் மார்க்கெட்டுக்கு செல்வதாக கூறி சென்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து மனோன்மணி தாயை தேடிய நிலையில் அவருடன் சேர்ந்து குமரவேலும் சாந்தியை தேடினார்.

ஆனால் இரவு வரை தாய் கிடைக்காததால் பதற்றம் அடைந்த மனோன்மணிக்கு வீட்டுக்குள் சென்று பார்க்க வேண்டும் என தோன்றியது.

இதையடுத்து உறவினர்களுடன் சேர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்து போது சாந்தி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மனோன்மணி கதறி அழுது கத்தினார்.

இந்த நேரத்தில் குமரவேல் அங்கிருந்து மாயமான நிலையில் பொலிசுக்கு தகவல் தரப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சாந்தியின் தலையில் 2 இடங்களில் காயம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இது தொடர்பான விசாரணையில் சாந்தியை குடிபோதையில் குமரவேல் கீழே தள்ளிவிட்டு தலையணையால் அமுக்கி கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.

இதையடுத்து பெற்ற தாயை கொலை செய்த கொடூரன் குமரவேலை பொலிசார் தேடி வருகிறார்கள்.
Previous Post Next Post