குளிக்க சென்ற தாய்க்கு நடந்த கொடூரம்... வாட்ஸ் அப்பில் முகத்தை காட்டு என கதறிய மகன்.. அதிர்ச்சி பின்னணி

தமிழகத்தில் மது குடிக்க பணம் தர மறுத்த தாயை கொலை செய்த மகன் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

திருச்சியை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் மனைவி சாந்தி (52).

இவர்களுக்கு மனோன்மணி (29) என்ற மகளும், குமரவேல் (28) என்ற மகனும் உள்ளனர். குமரவேலுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் வீட்டின் மாடியில் மனைவியுடன் வசித்து வருகிறார். ஹரிதாஸும், சாந்தியும் கீழ் தளத்தில் வசித்து வருகிறார்கள்.




கடந்த 20-ம் திகதி தனது தாய் சாந்தி குளிக்க சென்றபோது, அவரை பின் தொடர்ந்த குமரவேல் அவரது கழுத்தில் துண்டை சுற்றி நெரித்து கொலைசெய்து விடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சாந்தியிடம் மது போதையில் இருந்த குமரவேல் இன்னும் குடிக்க பணம் கேட்ட பின்னர் தாயை கீழே தள்ளியதோடு தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தார்.



பின்னர் அங்கிருந்து அவர் ஓட்டம் பிடித்த நிலையில் மனோன்மணி தாயை காண வீட்டுக்குள் வந்த போது அவர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சாந்தியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த பின்னர் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். வெளியூரில் இருந்த சாந்தியின் கணவர் ஹரிதாஸ் வந்த பிறகு சாந்தி உடல் அடக்கம் செய்யப்பட்டது.




இதற்கிடையே கொலை செய்து விட்டு தப்பி சென்ற குமரவேலை பொலிசார் தேடினர்.

தலைமறைவாக இருந்த குமரவேல் நேற்று காலை மனைவி யோகதீபாவை செல்போனில் தொடர்பு கொண்டு குடிபோதையில் அநியாயமாக தாயை கொன்று விட்டேன் என்று கதறியுள்ளார்.

அதன்பிறகு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இதற்கிடையே குமரவேல் நேற்று இரவு போதையில் உறவினர்களை தொடர்பு கொண்டு தனது தாயின் முகத்தை அடக்கம் செய்வதற்குள் பார்க்க வேண்டும். எனவே வாட்ஸ் அப்பில் தாய் சாந்தியின் முகத்தை காட்டும் படி கதறியுள்ளார்.




அதன்பிறகு மீண்டும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இந்நிலையில் குமரவேல் பாண்டிச்சேரியில் தலைமறைவாக இருப்பது திருச்சி பொலிசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து இரவோடு இரவாக புதுச்சேரிக்கு சென்ற பொலிசார் அங்கு பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த குமரவேலை மடக்கி பிடித்தனர்.

இதை தொடர்ந்து திருச்சிக்கு அழைத்து வரப்படும் குமரவேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
Previous Post Next Post