மனைவியுடன் உறவில் இருந்த வீடியோவை நண்பருக்கு அனுப்பிய காதல் கணவன்..! அதிர்ச்சி சம்பவம்

காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியுடன் உறவில் ஈடுபட்டத்தை தனது நண்பனுக்கு அனுப்பிய சைக்கோ கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் செலின். இவர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்துவந்துள்ளார்.

இந்நிலையில் அதே மருத்துவமனையில் வேலைபார்த்து வந்த அருண் என்பவர் செலினை காதலித்து வந்த சமயத்தில், செலின் பெங்களூருக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.இதனைத்தொடர்ந்து, அருண் தனது காதலை தெரிவித்த நிலையில் இருவரும் பெங்களூருவில் தனியாக ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.
அப்போது, செலினை அருண் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், வேண்டியது கிடைத்துவிட்ட நிலையில் அருண் செலினுடன் பேசுவதை தவிர்த்து அவரை கழட்டிவிட நினைத்துள்ளார்.

இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு செலின் பலமுறை கேட்டும் அருண் அதற்கு மறுத்துள்ளார். இதனால் செலின் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் நிலை வந்த நிலையில் அருண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அருண் - செலின் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து கணவன் மனைவி இருவரும் பெங்களூரில் தனியாக வசிவந்துள்ளனர். வேலைக்கு செல்லாமல் வீட்டிலையே இருந்து செலினுக்கு தொல்லைகொடுத்து வந்துள்ளார் அருண்.
இந்நிலையில் செலின் ஒருநாள் அருணின் ஈமெயில் லை திறந்து பார்த்தபோது கணவன் - மனைவி உல்லாசமாக இருந்த வீடியோயோவை அருண் தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செலின் இதுகுறித்து அருணிடம் கேட்க அவர் பதில் ஏதும் கூறாமல் பெங்களூரில் இருந்து கிளம்பி தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

அருணின் சொந்த ஊருக்கு சென்று செலின் தனது கணவனின் பெற்றோரிடம் விசாரிக்க முற்பட்டதில் அவர்களும் செலினை அடித்து விரட்டியதாக தெரிகிறது. காதலித்து திருமணம் செய்த கணவனே இப்படி கேவலமாக நடந்துகொண்டது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post