திருமண ஆசை காட்டி உல்லாசம்... ஏமாற்றிய இளைஞனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த இளம் பெண்

தமிழகத்தில் காதலித்து இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருந்துவிட்டு, வேறொரு இளம் பெண்ணை திருமணம் செய்யவிருந்த நபர் சென்னைக்கு ஓடியதால், பொலிசார் அவர் விசாரணைக்கு ஆஜராகும் படி இளைஞரின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ரெட்டிகுப்பத்தை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் பிரசாந்த் (25). கொய்யா வியாபாரியான, இவர் கொய்யா வியாபாரம் செய்வதற்காக கணிசப்பாக்கத்துக்கு பழங்கள் வாங்க செல்வது வழக்கம். அப்போது அங்குள்ள சிவன் கோவிலுக்கு அடிக்கடி செல்லும் போது அதே ஊரை சேர்ந்த ஆனந்தி (22) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.




இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியதால், இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அதன் பின் ஒரு கட்டத்தில், கண்டிப்பாக உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதால், அவருடன் பல முறை தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளார்.



இந்த காதல் கடந்த 3 வருடங்களாக நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் பிரசாந்த், ஆனந்தியிடம் திடீரென்று உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதால், அதிர்ச்சியடைந்த ஆனந்தி, அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி பல முறை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் பிரசாந்த் மறுத்துள்ளார். இதற்கிடையே பண்ருட்டி அருகே கரும்பூர் கிராமத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பிரசாந்த்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தகவல் ஆனந்திக்கு தெரியவர, மன வேதனை தாங்க முடியாமல் நேற்று காலை தனது காதலனான பிரசாந்த் வீட்டின் முன் அமர்ந்து திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் ஆனந்தியிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அவரை முதலில் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.




அங்கு ஆனந்தி கொடுத்த புகாரை தொடர்ந்து பொலிசார் பிரசாந்தின் வீட்டிற்கு ஆனந்தியுடன் சென்றுள்ளனர்.

அங்கு வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, பிரசாந்த் சென்னைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் பொலிசார் பிரசாந்த் விரைவில் காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறிவிட்டு திரும்பினர். தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறி, ஆனந்தி அங்கு போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Previous Post Next Post