பெண் ஆசிரியையுடன் வகுப்பறையில் உல்லாசம்... வசமாக சிக்கிய ஆசிரியர்! வைரலாகும் வீடியோவின் பின்னணி

தமிழகத்தில் ஆசிரியை ஒருவருடன் ஆசிரியர் நெருக்கமாக இருக்கும் வீடியோ கட்சிகள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி உள்ளது. இங்குள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பணியாற்றுகிறார்.
இதே ஊருக்கு அருகே உள்ள ராமசாமி நாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் ஆசிரியை ஒருவர் பணிபுரிகிறார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களாக தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தெரிந்த ராயப்பன்பட்டி பள்ளி நிர்வாகம் சில நாட்களுக்கு முன் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தது.இதற்கிடையில் ராமசாமி நாயக்கன்பட்டி சென்ற ஆசிரியர், பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாத நேரத்தில் வகுப்பறையில் பள்ளி ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்ததோடு, செல்பி, வீடியோவும் எடுத்துள்ளார்.
அதை, தனக்கு மிக நெருங்கிய ஆசிரியர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். இந்த நெருக்கமான வீடியோ தற்போது உத்தமபாளையம் மற்றும் தேனி பகுதிகளில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் வைரலாகி வருவதால பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகையில், இந்த வீடியோ உண்மையானதா அல்லது போலியானதா என கண்டறியப்பட்டு உண்மையானது என்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post