தாயுடன் வேறு ஆண் ஒன்றாக இருப்பதை கண்கூடாக பார்த்த மகள்! பின்னர் நடந்த விபரீதம்

தமிழகத்தில் காதலனுடன் சேர்ந்து சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடுவைத்து கொல்ல முயன்ற தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனை பிரிந்து தாய் வீட்டில் தனது 2 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு உதயகுமார் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டது.இவர்களின் பழக்கத்தை அறிந்த பெண்ணின் தாய் அவரை கண்டித்த நிலையில், தாயை பிரிந்த அவர் தனியாக வீடு எடுத்து வசித்தார்.
மகள் தனியாக சென்ற சில மாதங்களில் தாய் இறந்துவிட்டதால், தாயிடம் இருந்த தனது 2 வயது மகளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் வருகை, வீட்டிற்கு வந்து சென்ற காதலன் உதயகுமாருக்கு இடையூறாக இருந்துள்ளது.

இதனால் காதலர்களுக்குள் சண்டை வந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை அந்த சிறுமி பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை என்று பாராமல் அதனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர்.

பின்னர் சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்திய உதயகுமார், சிறுமி எழுந்து ஓடிவிடக்கூடாது என்பதற்காக பாதத்திலும் சூடுவைத்துள்ளான்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் பாதுகப்பு மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் கொடுமையைக் கண்டு மிரண்டு போயிருக்கின்றனர்.

குழந்தையில் அனைத்து உறுப்புகளிலும் சூடுவைத்ததோடு காயங்கள் ரணமாகவே இருந்து குழந்தை உயிரிழக்க வேண்டும் என்பதற்காக, அந்த காயங்களை மரக்குச்சியால் கிளறி வைத்த கொடூரத்தையும் அவன் செய்திருப்பதாக காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுமியின் தாயை உடனடியாக கைது செய்த பொலிசார் தலைமறைவாக இருந்த உதயகுமாரையும் கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post