இரவில் காதலியை சந்திக்க ரகசியமாக வந்த காதலன்... கையும் களவுமாக பிடித்து கிராமத்தினர் செய்த செயல்

இந்தியாவில் இரவு நேரத்தில் காதலியை ரகசியமாக சந்திக்க வந்த காதனை கிராமத்தினர் கையும் களவுமாக பிடித்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில் உள்ள கோனிஹ்யா கிராமத்தைச் சேர்ந்தவர் சாஹிப்கஞ்ச். இவர் பக்கத்து கிராமத்தில் இருக்கும் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த செவ்வா கிழமை இரவு சாஹிப்கஞ்ச் காதலியை சந்திப்பதற்காக ரகசியமாக கிராமத்திற்குள் நுழைந்துள்ளார்.

இதை அறிந்த கிராமத்தினர் சிலர் ஒன்று கூட இந்த ஜோடியை எப்படியாவது பிடித்து ஆக வேண்டும் என்று இவர்களை தேடியுள்ளனர்.
அப்போது குறித்த இடத்தில் இந்த ஜோடி கிராமத்தினரிடம் சிக்கிக் கொள்ள, அதன் பின் இது கிராம பஞ்சாயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பஞ்சாயத்தில் இருந்த ஊர் தலைவர்கள் முதலில் அந்தப் பெண்ணிடம் காதலனை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்டனர்.

அதற்கு அவள் ஆம் என்று சொல்ல, அதே கேள்வி அந்த ஆணிடமும் எழுப்பப்பட்டது, அவரும் ஆம் என்று பதிலளித்ததால், இருவருக்கும் அங்கேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்து உத்தரவிட்டது.
பஞ்சாயத்து அதன் உத்தரவை வழங்கியதும், கிராமவாசிகள் திருமண சடங்குகளை நடத்திய உள்ளூர் பாதிரியாரை அழைத்தனர். இந்த திருமணம் நடைபெறுவதற்குள் பொலிசாருக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post