இலங்கை தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா கனடாவுக்கு வந்து சில நாட்களுக்குள்ளாகவே தனக்கு தன் கணவர் துரோகம் செய்வதாக அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கொலை செய்யப்படுவதற்கு 18 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்திற்கு சென்ற தர்ஷிகா ஜெகன்னாதன், சாட்சியமளிக்கும் கூண்டில் ஏறி தனது கணவன் தன்னை தாக்கியது தொடர்பாக சாட்சியமளித்தது முதல், மேலும் சில தகவல்களை பிரபல கனேடிய ஊடகம் thespec செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தனது உறவுகளையும், நண்பர்களையும், ஏன் ஒரு அரசு வேலையையும் கூட உதறிவிட்டு கணவனுடன் இணைந்துகொள்வதற்காக ரொரன்றோவிற்கு சென்றுள்ளார் தர்ஷிகா.
கனடாவுக்கு வந்து சில நாட்களே ஆன நிலையில் 2017ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி, தனது கணவனின் அறையில் ஒரு பெட்டி நிறைய ஆணுறைகளும் ஆபாச படங்களும் இருப்பதைக்கண்ட தர்ஷிகாவுக்கு, தனது கணவர் தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தர்ஷிகாவுக்கு சிம் கார்டு ஒன்றை கொடுக்க மறுத்துள்ள அவரது கணவரான சசிகரன் தனபாலசிங்கம், இந்த நாட்டில் கணவன் மட்டும்தான் போன் உபயோகப்படுத்துவது வழக்கம் என்று கூறியதாக நீதிமன்றத்தில்சாட்சியமளித்துள்ளார் தர்ஷிகா.
அதற்கு பிறகு சோபா ஒன்றில் தூங்குவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார் அவர். தனது சந்தேகம் குறித்து கணவனிடம் கேட்க, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில், கார் ஒன்றில் செல்லும்போது தர்ஷிகாவின் கையைப் பிடித்து முறுக்கியுள்ளார் சசிகரன்.
இந்த சம்பவம் நடந்து ஆறு நாட்களான நிலையில், ஒரு நாள் தனது தலையைப் பிடித்து தலையணையில் வைத்து அழுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தர்ஷிகா, இரண்டு மூன்று நிமிடங்களுக்கு தன்னை சசிகரன் தலையணையில் வைத்து அழுத்த, அவரது கையைக் கடித்ததால் மட்டுமே தன்னை விட்டதாக தெரிவித்துள்ளார்.
மொழி பெயர்ப்பாளர் ஒருவர் உதவியுடன் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தர்ஷிகா, தன்னை அப்படி தலையணையில் வைத்து அழுத்தும்போது, ‘நான் யார் என்று உனக்கு தெரியுமா?, என்னால் என்ன செய்ய முடியும் என்று உனக்குத்தெரியுமா?’ என்று சசிகரன் கத்தியதாக தெரிவித்துள்ளார் தர்ஷிகா.
ஆனால் தர்ஷிகாவின் சாட்சியம் ஒரே மாதிரியாக இல்லாமல் மாறி மாறி இருப்பதாக கூறிய நீதிபதி, அதனால் அப்படி ஒரு வன்முறை உண்மையாகவே நிகழ்ந்ததா என சந்தேகம் ஏற்படுவதாக கூறி சசிகரனை விடுவித்துள்ளார்.

ஆனால், அதற்கு பிறகு ஒன்றரையாண்டுகளுக்குப்பிறகு, தர்ஷிகா கொலையில் சசிகரன்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷிகா, தன் மீது தாக்குதல் நடத்திய பிறகும் கணவனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க விரும்பியுள்ளார்.
தர்ஷிகா சொந்தக்காலில் நிற்க முடிவு செய்து ஆங்கில வகுப்புகளில் கலந்து கொள்ள, அங்கும் அவரை பின் தொடர்ந்து சசிகரன் தொந்தரவு செய்ததாக கூறியுள்ள தர்ஷிகா, அவருடன் வாழமுடியாது என்பதை விரைவிலேயே உணர்ந்துகொண்டுள்ளார்.
தர்ஷிகாவை சசிகரன் தாக்கியபோது வீட்டிலிருந்த அவரது தாய், அப்படி ஒரு தாக்குதல் நடக்கவேயில்லை என நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

தர்ஷிகாதான் கோபமாக இருந்ததாகவும், புலம்பெயர்தல் ஆவணங்கள் தொடர்பாக சண்டை ஏற்பட்டபோது, தர்ஷிகா சசிகரனை கடித்ததாகவும் அவர் தெரிவித்ததாக நீதிபதி Judge Kimberley Crosbie தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அவரது சாட்சியத்தை தான் நம்பவில்லை என்று கூறியுள்ள நீதிபதி Crosbie, கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல் சுற்றி வளைத்து பதிலளித்ததாகவும், தர்ஷிகாவை மோசமாக விமர்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் சசிகரனை குற்றவாளியாக தீர்க்க போதுமான அளவு சாட்சியம் கிடைக்கவில்லை என்றும், தர்ஷிகாவின் சட்சியம் தொடர்ச்சியற்றதாக இருந்ததாகவும், அரசு வழக்கறிஞரின் கேள்விக்கு ஒருவிதமாகவும், தனது வழக்கறிஞரின் கேள்விக்கு ஒருவிதமாகவும் அவர் பதிலளித்ததாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
தான் தர்ஷிகா பொய் சொல்கிறார் என்று தான் கூறவில்லை என்று கூறியுள்ள நீதிபதி, தனக்கு சந்தேகங்கள் இருந்ததாலேயே சசிகரனை விடுவித்ததாக தெரிவித்துள்ளார்.
எங்கு சென்றாலும் சசிகரன் தன்னை தொடர்வதாக அவர் அளித்த ஆதாரத்தின்பேரில், அவர் தர்ஷிகாவை நெருங்கக்கூடாது என உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவர். இதற்கிடையில், சசிகரன் Scarborough நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது சட்டத்தரணியான Mitch Engel, கருத்தேதும் கூற மறுத்துவிட்டார்.