அதிரவைத்த கனடா சிஷ்யையின் பாலியல் தாக்குதல் புகார்! நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக பரபரப்பு தகவல்

கனடாவை சேர்ந்த பக்தை நித்தியானந்தா மீது பல்வேறு புகார்களை சில தினங்களுக்கு முன்னர் கூறிய நிலையில் சாமியார் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ சில வருடங்களுக்கு முன்னர் வெளியானதிலிருந்தே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது.

நித்யானந்தா மீது பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.




இந்நிலையில் வாரம்தோறும் யூடியூப் வாயிலாக ஆன்மீக சொற்பொழிவாற்றி வந்தார் நித்தியானந்தா.

அவர் பேசிய வீடியோ ஒன்றில் மேட்டூர் அணையின் நீர்தேக்கப்பகுதியில் உள்ள ஜலகண்டேசுவரர் ஆலய மூலவர் லிங்கம் தன்னிடம் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.



இதுதொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தது.

இந்த சூழலில் நித்யானந்தாவின் சிஷ்யையாக இருந்த கனடிய பெண் சாரா லேண்ட்ரி என்பவர் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சமீபத்தில் முன் வைத்தார்.




மேலும் நித்யாந்தாவை பற்றி தான் சாடுவதால் அவரின் தூண்டுதலின் பேரில் தன் மீது வலைதளங்களில் பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தப்படுகிறது என கூறினார்.

இந்த சூழலில் நித்தியாந்தாவிடம் விசாரணை நடத்தப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கு போலி பாஸ்போர்ட் வாங்க பல கோடி ரூபாய் வரை அவர் செலவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Previous Post Next Post