வாட்ஸ் அப்பில் வந்த மகளின் நிர்வாண புகைப்படம்! வெளிநாட்டில் உள்ள மாப்பிள்ளை குறித்து அதிர்ந்த மாமனார்

வெளிநாட்டில் உள்ள மருமகன் இந்தியாவில் உள்ள மாமனாரின் செல்போனுக்கு அவர் மகளின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தை சேர்ந்தவர் சுனில் சிங். இவர் சமீபத்தில் பொலிசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், என் மகளுக்கு கடந்த 2013-ல் திருமணம் செய்து வைத்தேன். திருமணத்துக்கு பின்னர் என் மாப்பிள்ளையும், மகளும் கனடாவுக்கு சென்றுவிட்டனர்.




அங்கு சில காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்த இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்ட நிலையில் என் மகள் சொந்த ஊருக்கு வந்துவிட்டாள்.

பின்னர் என் மாப்பிள்ளையும் ஊருக்கு வந்தார், இங்கு மீண்டும் சண்டை ஏற்பட்ட நிலையில் என் மகளை அவர் பிரிந்தார்.



ஆனால் 2016-ல் மீண்டும் என் குடும்பத்தாருடன் நெருங்கினார், இதன்பின்னர் மீண்டும் கனடாவுக்கு சென்ற அவர் கடந்தாண்டு என் மகள் வேறு ஆணுடன் நிர்வாணமாக இருக்கும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார்.

என் மகளுக்கு திருமணத்துக்கு முன்னர் பார்க்கப்பட்ட வேறு நபருடன் என் மகள் இருப்பது போன்ற புகைப்படங்களை அவர் அனுப்பினார்.




ஆனால் இதை வெளியில் சொன்னால் அவமானம் என எண்ணி புகார் கொடுக்கவில்லை.

ஆனால் மீண்டும் சமீபகாலமாக மோசமான புகைப்படங்களை அனுப்புகிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பொலிசார் கூறுகையில் தற்போது சுனில் மாப்பிள்ளை கனடாவில் தான் உள்ளார், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
Previous Post Next Post