மனைவியுடன் உல்லாசம்! துரோகம் செய்த நண்பனை கொடூரமாக கொலை செய்த ஆத்திரத்தை தீர்த்த நபர்

தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் முன்னாள் இராணுவ வீரர் கடத்தப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. முன்னாள் ராணுவ வீரரான இவர் அந்த பகுதியில் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார்.

ஆனால் பெரியசாமிக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், பெரியசாமி மனைவியை பிரிந்து தனது தந்தை ராமமூர்த்தியுடன் இருந்து வந்தார்.இந்நிலையில் பெரிய சாமிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் தாமரை நகரை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் செந்தில்குமார் (40) என்பவருக்கும் இடையே தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக இருந்து வந்தனர்.

இதன் காரணமாக பெரியசாமி திருவண்ணாமலையில் உள்ள செந்தில்குமார் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.

இதையடுத்து கடந்த 27-ஆம் திகதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பெரியசாமி மர்மநபர்களால் கடத்தப்பட்டார்.
இது தொடர்பாக அவரது தந்தை ராமமூர்த்தி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விசாரணையில், கடத்தப்பட்ட பெரியசாமிக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி சரண்யா (32) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது.

அவர்கள் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இது செந்தில்குமாருக்கு தெரிய வரவே அவர் 2 பேரையும் கண்டித்தார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெரியசாமி, சரண்யாவை அழைத்துக் கொண்டு போச்சம்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார்.

இது தொடர்பாக செந்தில்குமார் - பெரியசாமி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்பெரியசாமியை தீர்த்து கட்ட முடிவு செய்த செந்தில்குமார், அதன்படி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெரியசாமியை காரில் கடத்தி சென்று கொலை செய்துள்ளார்.
மேலும், பெரியசாமியின் உடலை திருவண்ணாமலை மாவட்டம் காணிப்பாடி என்ற இடத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார்.

பொலிசார் அங்கு சென்று பெரியசாமியின் உடலை மீட்ட போது, பெரியசாமி கல்லால் தாக்கப்பட்டும், மர்ம உறுப்பு நசுக்கப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post