கடும் வெள்ளத்திற்கு நடுவே போட்டோஷூட் நடத்திய மாணவி.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

பீகார் மாநிலத்தில் கடும் வெள்ளத்திற்கு நடுவே போட்டோஷூட் நடத்திய மாணவியை இணையதளவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பீகாரில் கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அனைவரும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றனர்.

வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு உணவு பொருட்களும் கொண்டு செல்ல முடியாமல் நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து வருகிறது.வெள்ளம் காரணமாக ஏற்கனவே 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வரும் மாதங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.இந்த நிலையில் வெள்ளத்திற்கு நடுவே பாட்னாவில் சாலைகள் மற்றும் தெருக்களின் நிலைமைகள் குறித்து கவனத்தை ஈர்க்க, அதிதி சிங் என்கிற மாணவி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இதனை பார்த்த இணையதளவாசிகள் சிலர் திட்டினாலும், இதன்மூலம் நிலைமையை வெளிஉலகிற்கு தெரியப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பெற முடியும் எனவும் பாராட்டி வருகின்றனர்.

Previous Post Next Post