திருமணம் ஆன ஒரு மாதத்திலே அழுகிய நிலையில் சடலமாக மிதந்த பள்ளி ஆசிரியை!

ஆறு நாட்களாக மாயமாகியிருந்த பள்ளி ஆசிரியையின் சடலம் அழுகிய நிலையில் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குமாரி அங்கிதா (25), கடந்த மாதம் 7-ம் திகதியன்று தனியார் வங்கியில் வேலை செய்து வரும் வேத பிரகாஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
மனைவிக்கு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியை வேலை கிடைத்ததால், இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.7ம் திகதியன்று பொலிஸ் நிலையம் வந்த பிரகாஷ் தன்னுடைய மனைவியை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை தலைநகரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ரயில்நிலைய குளத்தில் ஆசிரியையின் சடலம் மிதந்துள்ளது.


அந்த வழியாக சென்ற ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


மேலும், மாயமான ஆசிரியை கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்கிற கோணத்தில் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து நூற்றுக்கும் அதிகமான மக்கள் கூடியதால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.
Previous Post Next Post