இந்தியாவில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், அதை தாங்க முடியாமல் சிறுமிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெறவிருப்பதாக மாவட்ட சமூக நலத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனால் உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்று மணப்பெண்ணாக இருந்த சிறுமியை அதிகாரிகள் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அதிகாரிகளிடம் அந்த சிறுமி கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமி கூறுகையில், மங்கூன் கிராமத்தை சேர்ந்த ரவி மகன் ரஞ்சித் (25), கலியபெருமாள் மகன் பாபு (23) ஆகிய இருவரும் தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் தான் எனக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர் என கூறி வேதனையடைந்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சமூக நலத்துறை அதிகாரிகள், இது குறித்து பாடாலூர் போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் ரஞ்சித், பாபு ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமிக்கும் இப்போது திருமணம் செய்யக்கூடாது, 18 வயது நிரம்பிய பிறகு தான் திருமணம் நடத்த வேண்டும் என சிறுமியின் பெற்றோரிடம் அதிகாரிகள் அறிவுரை கூறியதால், திருமணம் நிறுத்தப்பட்டது.