கணவன் சொன்ன அந்த வார்த்தை... காதலனுடன் சேர்ந்த மனைவி செய்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

இந்தியாவில் காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தெலுங்கானாவின் Mahbubabad பகுதியில் இருக்கும் Thanda-வை சேர்ந்தவர் நவீன். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.




இந்நிலையில் நவீன் சமீபத்தில் விபத்தில் மரணமடைந்தார். இருப்பினும் இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் விபத்து போன்று தெரியவில்லை என்று சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.



சந்தேகத்தின் வலையில் தான் நவீனின் மனைவி பொலிசாரிடம் சிக்கினார். அவர் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

பொலிசார் நடத்திய விசாரணையில், நவீன் மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷ் என்ற நபரை சந்தித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இருக்கும் நட்பு நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் இதை அறிந்த நவீன் மனைவியை கடுமையாக எச்சரித்துள்ளார். கணவனுக்கு தெரிந்துவிட்டது என்பதால், அப்போதே அவர் கணவனை எப்படி தீர்த்து கட்டுவது என்று காதலன் வெங்கடேஷனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.




அதன் படி சம்பவ தினத்தன்று கணவனை ஆட்டுக்கறி வாங்கிவிட்டு வரும் படி கூறியுள்ளார். அதற்கு முன்னர் காதலன் வெங்கடேஷனுக்கு காதலன் வீட்டை விட்டு வெளியில் வருகிறான், அவனை தீர்த்து கட்டு விடு என்று கூறியுள்ளார்.

இதையடுத்து நவீன் சென்ற போது, வெங்கடேஷ் இரும்பு கம்பியால் அவரை தாக்கி கொலை செய்துள்ளார். அதன் பின் இது இரு சக்கர வாகன விபத்து போன்று சித்தரிக்க முயன்று கடைசியில் சிக்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

பொலிசார் வெங்கடேஷ் மற்று நவீனின் மனைவியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post