இலேசான இலகுரக வண்டியில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் பிரித்தானிய தாய் தன்னுடைய வலது கையை இழந்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த செல்சியா வெல்லா என்கிற 26 வயது தாய் கடந்த மாதம் மெக்சிகோவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்துள்ளார்.
அங்கு தன்னுடைய நண்பருடன் இலேசான இலகுரக வண்டியான buggy-ல் பயணம் மேற்கொண்டிருந்துள்ளார். எதிர்பாராத நேரத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், ஈரப்பதமான புற்கள் நிறைந்த பகுதியில் வேகமாக சுழன்று செல்சியாவின் கையில் விழுந்துள்ளது.

இதில் அவருடைய முழங்கை பகுதி தனியாக துண்டிக்கப்பட்டு இரத்தம் வழிந்தோட ஆரம்பித்துள்ளது. உடனடியாக அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, செல்சியா துண்டான தன்னுடைய கையை மற்றொரு கையில் பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த போதே, திடீரென செல்சியா மூச்சு விடுவதை நிறுத்தியுள்ளார். இதனால் பதறிப்போன மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்கிற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு கையை இணைக்க முடியாத கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் பிரித்தானிய திரும்பிய செல்சியாவிற்கு செயற்கை கை பொருத்துவதற்காக அவருடைய தங்கை ஆன்லைனில் நிதி திரட்டி வருகிறார். பெரும்பாலும் வலது கையை மட்டுமே பயன்படுத்தி வந்த செல்சியா, தற்போது இடது கை பழக்கத்தை கற்று வருவதாக அவருடைய சகோதரி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.