திருமணமாகி புகுந்த வீடு செல்ல வேண்டிய மகள்... சுடுகாட்டில் கதறி அழுத பெற்றோர்

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் டெங்கு காய்ச்சலால் மரணமடைந்த சம்பவம் அவரது பெற்றோரை உலுக்கியுள்ளது.

திருமணமாகி புகுந்த வீட்டுக்கு செல்ல வேண்டிய மகள், சுடுகாட்டுக்கு செல்வதை காண நேர்ந்ததே என பெற்றோர்கள் வாய்விட்டு கதறியது அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது.ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் கிருஷ்ணம் ராஜூ என்பவரின் மகள் 18 வயதான சந்திரகலா. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கடந்த 30 ஆம் திகதி திருமணம் நடத்த நிச்சயிருந்தனர்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக சந்திரகலாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது. இதனால் நிச்சயித்த திகதியில் திருமணம் நடத்த முடிவு செய்தனர்.

ஆனால் இதற்கு அரசு மருத்துவர்கள் அனுமதி தரவில்லை. இதையடுத்து திருமணம் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சந்திரகலா மருத்துவமனையில் வைத்தே மரணமடைந்துள்ளார்.

திருமணமாகி கணவரின் வீட்டுக்கு செல்லவேண்டிய தங்களது மகள், டெங்குவால் சுடுகாட்டுக்கு செல்கிறாரே எனக்கூறி பெற்றோர் உறவினர்கள் கதறி அழுதானர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post