ரோஜா சீரியல் நாயகியின் வாழ்வில் நடந்த சோகம்.. நின்று போன திருமணம்..வெளியான பரபரப்பு தகவல்..!

இன்றைய காலக்கட்டங்களில் வெள்ளிதிரையை விட, சின்னத்திரையில் உள்ள நடிகை, நடிகர்கள் மக்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமாகி விடுகின்றனர்.



அந்த வகையில் மக்களால் ரசித்து வரும் சீரியல் நாயகி பிரியங்கா ரோஜா சீரியலின் மூலம் பிரபலமானவர். இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை கொண்டவர். ஆனால் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரை பக்கம் வந்தார்.

இவர் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான சின்னத்திரை நடிகர் ராகுலை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளனர்.



இந்நிலையில் தற்போது தனது திருமணம் குறித்த தகவலை பிரியங்கா கூறியுள்ளார். அதாவது எங்களுக்குள் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் எங்கள் திருமணம் நிச்சயதார்த்துடன் முடிவடைந்து விட்டதாக கூறியுள்ளார்.
Previous Post Next Post