பொலிஸாரால் விபத்தில் சிக்கிய பெண்... வீடு திரும்பியதும் எடுத்த விபரீத முடிவு

சென்னையில் பொலிஸாரால் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வீடு திரும்பியதும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த யுவனேஷ்குமார் என்பவரின் மனைவி பிரியதர்ஷினி (25). இருவரும் கடந்த 20ம் திகதியன்று மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வாகனத்தை மறித்ததாக தெரிகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரியதர்ஷினி, மீது பின்பக்கமாக வந்த லொறி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் பலத்த காயமடைந்த பிரியதர்ஷினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவம் அறிந்து திரண்ட பொதுமக்கள் பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்களை அடித்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் 10 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரியதர்ஷினி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post