டிக் டாக்கில் மூழ்கி கிடந்த மனைவி...! பூரி கட்டையால் போட்டுத்தள்ளிய கணவன்

டிக்டாக்கில் மூழ்கி கிடந்த மனைவியை அவருடைய கணவர் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கான மாநிலத்தில் தையற்கடைக்காரராக பணிபுரிந்து வரும் பாசகாசிம் சாஹேப், கடந்த 14 வருடங்களுக்கு முன்பு பாத்திமா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்த சில காலங்களிலே தம்பதியினருக்குள் பிரச்னை எழ ஆரம்பித்துள்ளது. பாத்திமா அதிகம் செலவு செய்து வந்ததால் சாஹேப் கோபத்துடன் இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையில் 2 மாதத்திற்கு முன்பாக பாத்திமாவிற்கு பஞ்சாயத்து அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக வேலை கிடைத்துள்ளது.



அதிலிருந்து பாத்திமா சமூகவலைத்தளமான டிக்டாக்கில் வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்துள்ளார். எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல, மனைவியின் மீது ஏற்கனவே கோபத்தில் இருந்த சாஹேப் இப்போது சந்தேகப்பட ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் அக்டோபர் 27ம் திகதியன்று கணவன்-மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சாஹேப், சப்பாத்தி கட்டையால் பாத்திமாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் மயங்கிவிழுந்த பாத்திமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் இதனை தற்கொலையாக மூடிமறைக்க, தூக்குபோட்டுக்கொண்டது போல ஜோடித்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், தீவிர விசாரணைக்கு பின்னர் சாஹேப் கொலை செய்திருப்பதை உறுதி செய்து இன்று கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post