என் வாழ்க்கையை சீரழித்து விட்டாங்க… கதறிய மகாலட்சுமி! காரணம் இது தான்..!

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தனக்கும் நடிகர் ஈஸ்வருக்கும் தவறான உறவு இருப்பதாக அவரது மனைவி ஜெயஸ்ரீ கூறிவருவது முற்றிலும் பொய் என்று தற்போது பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகரான ஈஸ்வர், சின்னத்திரை நடிகையான ஜெய்ஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களாகவே ஜெய்ஸ்ரீக்கும் ஈஸ்வருக்கும் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் ஈஸ்வர் தன்னை துன்புறுத்துவதாகவும் கொடுமை படுத்துவதாகவும் கூறி அவரது மனைவி ஜெயஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலையம் ஈஸ்வரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

நடிகர் ஈஸ்வர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். வெளியே வந்த அவர் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்து இருந்தார் . அப்போது பேசிய அவர் தன் மனைவி தன் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



அதுமட்டுமில்லாமல் நடிகர் ஈஸ்வருக்கும், சின்னத்திரை நடிகை மகாலட்சுமி என்பவருக்கும் தவறான உறவு இருப்பதாக ஜெயஸ்ரீ கூறுவது முற்றிலும் பொய் எனவும் அவர் கூறினார். இதனைக் குறித்து நடிகை மகாலட்சுமி பத்திரிக்கை ஒன்றிற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்திருக்கிறார்.

அப்போது பேசிய நடிகை மஹாலட்சுமி, என்னுடைய கணவர் அணிலும் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீயும் இணைந்து என்னையும் ஈஸ்வரையும் கார்னர் செய்கிறார்கள் என்று கூறினார். அவர்கள் இருவரும் இணைந்து என்னையும் ஈஸ்வரையும் பழி வாங்குவதற்காகவே இத்தகைய தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.

அதுபோலவே இந்த செய்தி எல்லாரிடமும் பரவியுள்ளது. எல்லோரிடமும் நான்தான் தவறானவள் என்று கருத்து நிலவி வருகிறது. இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்று நடிகை மகாலட்சுமி கூறியிருக்கிறார். இனிமேல் யார் என் முகத்தை பார்த்தாலும் அவர்களுக்கு இந்த சம்பவம் தான் நினைவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

மேலும் இம்மாதிரியான தவறான கருத்துக்களை பரப்பிய அவர்கள் இருவரையும் நான் சும்மா விடமாட்டேன். நிச்சயம் அவர்கள் மீது வழக்கு தொடர்வேன் என்றும் நடிகை மகாலட்சுமி ஆவேசமாக கூறியிருக்கிறார்.
Previous Post Next Post