நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கிய பிரபல நடிகை... 4 ஆண்டுகளுக்கு பின்பு காரணத்தினை வெளியிட்ட தோழி

தொகுப்பாளினியாக சின்னத்திரைக்கு அறிமுகமான பிரபல நடிகையின் மர்ம மரணம் குறித்து அவரது தோழி தகவல் ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளார்.

பல சீரியல்களில் வில்லியாக வலம்வந்த இவர் சில படங்களில் கதாநாயகிக்கு தோழியாகவும் நடித்திருந்தார்.

கோவையை சேர்ந்த அபர்ணா, சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் சபர்ணா. அவரது உடல் நிர்வாணமாக அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியது பெரும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியது.



பின்பு உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணையும் நடந்து வந்தது. ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று உறுதியாக வெளியாகவில்லை.

இந்நிலையில் சபர்ணா மரணித்து 4 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது தோழியான சீரியல் நடிகை உஷா எலிசபெத், அவரது தற்கொலை குறித்து பேசியுள்ளார். அதாவது, பல நாட்களாக சபர்ணா நடிப்பு வாய்ப்புகள் எதுவும் கிடைக்க வில்லை என தன்னிடம் கூறிவந்தததோடு, மன உளைச்சலிலும் இருந்துவந்தார்.

நானும் அவ்வப்போது அவறுக்கு ஆறுதல் கூறியும் அவர் இவ்வாறான முடிவினை எடுத்துவிட்டார் என்று கூறியுள்ளார். தற்போது வரை நடிகை சபர்ணாவின் மரணத்திற்கான காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவரது தோழி கூறியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Previous Post Next Post