கணவருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம்!.. உயிரை மாய்த்துக் கொண்ட பெண்

தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் தந்தை- மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரை அடுத்த கண்ணாரபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாவாடைசாமி(வயது 58), இவரது மகள் சங்கீதா(வயது 28).இவருக்கும், ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆனது.

இந்நிலையில் தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததால் கணவரை விட்டு தந்தை வீட்டுக்கு வந்து விட்டார் சங்கீதா.

நீதிமன்றத்திலும் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் ராஜேசுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தது.

இதை கேள்விப்பட்ட சங்கீதா மனமுடைந்த தந்தையுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post