விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர்! காதலால் நடந்த விபரீதம்

தமிழகத்தில் பெண் ஒருவர் காதல் தோல்வி காரணமாக விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவருக்கு புனிதவதி(31) என்ற மகள் இருந்தார். புனிதவதி மருத்துவருக்கு படித்துவிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பொது மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் புனிதவதியின் பெற்றோர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் புனிதவதியை கோவிலுக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர் வராத காரணத்தினால், வீட்டில் விட்டு விட்டு கோவிலுக்கு சென்றுள்ளனர்.

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பெற்றோர், புனிதவதியின் அறையில் விளக்கு எரிவதை கண்டுள்ளனர். மகள் ஏதோ படித்து கொண்டிருப்பாள் என்று நினைத்து, அவர்கள் தூங்க சென்றுவிட்டனர்.

அதன் பின் மறுநாள் காலை எழுந்தும், புனிதவதியின் அறையில் தொடர்ந்து விளக்கு எரிந்த படி இருந்ததால், சந்தேகமடைந்த பெற்றோர், அறையின் கதவை தட்டியுள்ளனர்.ஆனால் கதவு திறக்காததால், உடனடியாக உறவினர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, புனிதவதி மயங்கிய நிலையில் கிடக்க, அருகில் ஊசி, சிரிஞ்ச் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து புனிதாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, விரைந்த வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் புனிதவதி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இவர் சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தததால் அன்றைய தினத்தில் இருந்து அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்த விரக்தியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் காதல் தோல்வியா அல்லது வேறு எதுவும் காரணமா? என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post