அதை பார்த்துதான் அவருக்கு அப்படி ஒரு லிப் லாக் கொடுத்தேன்.. சூட்டைக் கிளப்பிய ரம்யா நம்பீசன்

தமிழ் சினிமாவில் எவ்வளவுதான் நன்றாக நடித்தாலும் ஒருசில கதாநாயகிகள் துரதிருஷ்டம் காரணமாக முன்னணி நாயகியாக வலம் வரமுடியாது. அப்படியே ராசியில்லாத நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ரம்யா நம்பீசன்.விஜய் சேதுபதியுடன் ரம்யா நம்பீசன் நடித்த சேதுபதி படம் ரசிகர்களிடையே பெரிதும் ரசிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நட்புனா என்னனு தெரியுமா, குள்ளநரிக்கூட்டம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் இடையே ஓரளவு கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.அதுமட்டுமில்லாமல் இமான் இசையில் இவர் பாடிய கலாச்சி பை பாடல் இன்று வரை பலரது கருத்தாக உள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் பகத் பாசிலுடன் இவர் நடித்த லிப்லாக் காட்சிகளைப் பற்றி கூறியதை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரம்யா நம்பீசன் கூறியதாவது, இதற்கு முன் நான் லிப் லாக் முத்தம் போன்ற எந்த சம்பவமும் நான் பண்ணியது இல்லை எனவும், முதன்முதலாக அந்த காட்சியை படமாக்கும்போது எப்படி முத்தம் கொடுப்பது என்று கூட தெரியாமல் விழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.அதற்காக ஹிந்தியில் உள்ளக கமினா என்ற படத்தில் பல முத்த காட்சிகள் இருப்பதை பார்த்து தான் கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிறகுதான் பகத் பாசிலுடன் சபா கூரிஷி என்ற படத்தில் உதட்டு முத்தக்காட்சியில் நடித்ததாகவும் கூறியுள்ளார்.
Previous Post Next Post