நடிக்க ஓட்டல் கூப்பிட்ட இயக்குநர்.. தோலில் கைவைத்து நடிகர்.. பரபரப்பை ஏற்படுத்திய நவ்யா நாயர்..

மலையாள சினிமாவில் இஷ்டம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நவ்யா நாயர். தமிழில் அழகிய தீ யே என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.இதையடுத்து சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் இணையத்திற்கு பேட்டி ஒன்றில் சினிமா அனுபவங்களை பற்றி கூறியுள்ளார்.

இஷ்டம் படத்தில் நடித்ததை பார்த்து இயக்குநர் சிபி என் புகைப்படத்தினை பார்த்து ஓட்டலுக்கு அழைத்தார். ஓட்டலில் பல டெஸ்ட் வைத்தப்பின் நடிப்பை பரிசோதித்து வீடியோவாக பதிவு செய்தார் சிபி.

அந்தவீடியோவை நடிகர் திலீப்பிற்கு அனுப்பி என்னை திலீப்பிற்கு ஜோடியாக்க நடிக்க வைத்தார். அப்படத்தில் நடிக்கவில்லை என்றால் நான் நடிகையாக வந்திருக்கமுடியாது. ஆனால் அப்போது திலீப் என் தோலில் கைவைத்து போஸ் கொடுத்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காமல் படப்படப்பு ஏற்பட்டது. ஒரு ஆண் என்மீது கைவைத்ததும் பௌஅம் வந்து சங்கடத்திற்கு ஆளானேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
Previous Post Next Post