அக்கா நீங்க பப்லியா இருந்த போட்டோ காமிங்க. ரசிகரின் வேண்டுகோளை நிறைவேற்றிய சித்ரா.

தொலைக்காட்சிகள் அனைத்தும் மாறி மாறி எத்தனையோ சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மட்டும் தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் விஜய் காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் குடும்ப ரசிகர்கள் மட்டுமல்லாது இளசுகளையும் கவர்ந்துள்ளது.இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜி, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இந்த தொடரில் மூன்று அண்ணன் தம்பி தம்பதியர்கள் நடித்தாலும் இந்த தொடரில் மூன்றாவது ஜோடியாக வருபவர் தான் கதிர்– முல்லை. இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம்.


மேலும், இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். நடிகை சித்ரா அவர்கள் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்.

பின்னர் படிப்படியாக சீரியலில் நடிக்கத் தொடங்கினார். முதலில் இவர் விஜே வாக தான் அறிமுகமானார். நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர்.

நடிகை சித்ரா அவர்கள் முதன்முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தார்.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார்.

மேலும், சித்ரா, குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று உள்ளார். ”முல்லை சித்ரா” என்ற குரூப் ஒன்றை ஓபன் செய்து ரசிகர்கள் சித்ரா குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவருக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள்.

அந்த நிகழ்ச்சியில் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ என்ற பாட்டுக்கு இவர்கள் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்ததுஎப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சித்ராஅடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதே போல தனது ரசிகர்களுடன் சாட்டிங்கிளும் ஈடுபடுவார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகர்களிடம் சாட்டிங்கில் ஈடுபட்ட போது ரசிகர்கள் சிலர் புகைப்படங்களை கேட்க தனது பழைய புகைப்படங்களை எல்லாம் அள்ளி வீசியுள்ளார் சித்ரா.

அதில் பப்லியான தோற்றத்தில் கொழுக் மொழுக் என இருக்கும் சில புகைப்படங்களை கண்டு சித்ராவின் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்கடைந்து உள்ளனர்.
Previous Post Next Post