பெண்ணை நிர்வாணப்படுத்தி கை, கால்களை முறித்து நடுக்காட்டில் அரங்கேறிய கொடுமை!

சேலத்தில் கணவரை விட்டு வேறு ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பினால், கணவர்களின் உறவினர்கள் பெண்ணிற்கு கொடுத்துள்ள தண்டனை பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் என்ற இடத்தில் பாலமலை கெம்மம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னகுள்ளன். இவரது மனைவி கலா மற்றும் வயதிற்கு வந்த பெண் பிள்ளைகளும் இருந்துள்ளனர்.இந்நிலையில் கலா அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இது நாளடைவில் கணவருக்கு தெரியவரவே மனைவியைக் கண்டித்துள்ளார்.

அதனை பொருட்படுத்திக்கொள்ளாத கலா மீண்டும் தனது அவருடன் பழகி வந்த நிலையில், கணவரின் உறவினர்களும் கலாவைக் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று விறகு எடுத்துவருவதாக கூறிய காட்டிற்குள் சென்ற கலா, சின்னசாமியை சந்தித்ததை, சின்னகுள்ளனின் உறவினர்களான செல்லப்பன், ரவி மற்றும் ஒருவர் கண்டுள்ளனர்.

ஆத்திரமடைந்த அவர்கள் கலாவை நிர்வாணப்படுத்தி, பல இடங்களில் பிளேடால் குத்தி கிழித்ததோடு, கை மற்றும் கால்களையும் முறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கலா இறந்துவிட்டார் என்று நினைத்து அவரை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

மறுநாள் கலா உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை அவதானித்த அக்கம்பக்கத்தினர் அவரை, மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து, கை மற்றும் கால்களுக்கு கட்டுபோட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிசார், கலா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்பமையில் கணவரின் உறவினர்கள் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.

இதனிடையே கலாவின் கணவரை விசாரணை செய்ய அவரது வீட்டிற்கு சென்ற போது, அங்கு சாராயம் காய்ச்சி வந்ததை அவதானித்த பொலிசார் அவரையும் கைது செய்துள்ளனர்.

Previous Post Next Post