வீடியோ கால் பேசும் பேது நிர்வாண புகைப்படம்... அம்மாவுக்கு நோய்! காசி இளம் பெண்களை மயக்கியது இப்படி தானாம்

தமிழகத்தில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காசியைப் பற்றி அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற சுஜி, பள்ளி மாணவிகள் முதல் பெண் மருத்துவர் வரை என பல பெண்களிடம் நெருக்கமாக இருந்து, அதை புகைப்படமாக எடுத்து, மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான்.

இவனின் ஆட்டம் எல்லை மீறி சென்றதால், குறித்த சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க காசி செய்யப்பட்டான்.

இதையடுத்து பொலிசார் அவனை காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் அவனுக்கு உடந்தையாக இருந்த நண்பனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.இன்றோடு விசாரணைக்கான அவகாசம் முடிவதால், பொலிசார் மேலும் விசாரணைக்கு அவகாசம் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காசி பெண்களை எப்படி மயக்குவான்? அதன் பின் என்ன செய்வான் என்பது குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசி தான் பார்க்கும் பெண்களை ஏமாற்ற நினைத்தால், மிகவும் வேதனையாக ஒரு கண்ணீர் கதையை செல்வானாம் , பெண்களிடம் அவன் பயன்படுத்தும் முக்கிய ஆயுதமே அன்பாக பேசுவது தானாம், எந்த பெண்ணாக இருந்தாலும் அன்பு, கரிசனம், அக்கறை உள்ளவர் போலவே பேச்சை தொடங்கி தொடர்வதுதான் பழக்கமே.அதன் பின், அவனை நம்பி செல்போன் நம்பர்களை பெண்கள் தர ஆரம்பிக்க, பிறகு வாட்ஸ்அப் சேட்டிங், வீடியோ கால் என உடல்ரீதியான நெருக்கம் வரை கொண்டு சென்றுவிடுவானாம்.

வீடியோ சாட் செய்யும்போது, நிர்வாண புகைப்படங்களை ஸ்கிரீன் ஷாட்கள் எடுத்து அதனை தன்னுடைய செல்போனில் பத்திரமாக வைத்து வந்துள்ளான்.

பெரும்பாலும் பணம் பறிக்க காசி சொல்லும் காரணம், அம்மாவுக்கு புற்று நோய் என்பது தான், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் காசி பற்றி வெளியே வந்தாலும், அதன் உண்மை தன்மையை நாகர்கோவில் அனைத்து மகளிர் பொலிசார் கண்டறிய முயன்றுள்ளனர்.காசியிடம் இருந்து பெறப்பட்டு வரும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு வருகிறது. காசியிடம் ஏமாந்த பெண்கள் தொடர்பான பட்டியல் தயாராகி வருகிறது. காசிக்கு பின்னணியில் ஒரு பெரிய கும்பலே இருக்கும் என்பதால் இந்த 3 நாள் விசாரணைக்கு பிறகுதான் அவர்கள் யார் யார் என்ற விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post