மூன்று பெண்களை அரை நிர்வாணமாக்கி சிறுநீரை குடிக்க வைத்த கிராம மக்கள்! நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

பீகாரில் மூன்று பெண்களை மொட்டை அடித்து, அரை நிர்வாணமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள டாக்ரமா என்ற கிராமத்தில், இந்த கொடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அங்கு வந்த மூன்று பெண்களை மந்திரவாதிகள் என நினைத்த கிராமத்து கும்பல் ஒன்று, அவர்களுக்கு மொட்டையடித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.பின்னர் அரை நிர்வாணமாக்கி அவர்களை சிறுநீரை குடிக்க வைத்து இருசக்கர வாகனத்தில் கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது மிகப்பெரிய குற்றம் என குறிப்பிட்டுள்ள மாவட்ட காவல்துறையினர், விசாரணையை துவங்கி 9 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரப்படுவதாகவும் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post