திருமணமாகி ஒரே வருடத்தில் கணவன் மரணித்த நிலையில் மாமனாரால் நடந்த கொடுமை..? துடிதுடித்து இறந்த 26 வயது பெண் ..!

லாக் டவுண் காரணமாக மாமனார் வீட்டில் மாட்டிக் கொண்ட சுஷ்மிதா என்ற 26 வயது பெண் மர்மமாக இறந்த விடயம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேபாலை சேர்ந்த ரூபகாந்த் என்ற இளைஞருக்கும் சுஷ்மிதாவிற்கு பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப் பட்டது. திருமணம் முடிந்து ஒரே வருடத்தில் ரூபகாந்த் விபத்து ஒன்றில் மரணமடைந்தார்.



இதன் பின் டெல்லியில் தாய் வீட்டில் இருந்து சுஷ்மிதா பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ரூபகாந்தின் மரணத்தின் பின் சடங்குகள் இன்னும் செய்ய வேண்டும் எனவும் சுஷ்மிதாவிற்கு ரூபகாந்தின் தந்தை அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். கணவரின் சடங்குகளை முடித்து வருவதாக கூறி நேபால் சென்றார் சுஷ்மிதா.






அங்கு சென்ற சுஷ்மிதா லாக்டவுனால் மீண்டு டெல்லி திரும்ப முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில் மாமனார் வீட்டில் இருந்து தாய்க்கு கால் செய்த சுஷ்மிதா இங்கு சடங்குகள் ஏதும் இல்லை அம்மா, அன்றாடம் வீட்டி வேலைகள் தான். ஏதோ நடக்கப் போகிறது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் சமயல் அறையில் சுஷ்மிதாவின் சடலம் கிடந்துள்ளது. மர்மமாக சுஷ்மிதா இறந்து கிடந்தாலும் அவரது தலை மற்றும் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது. இது சுஷ்மிதாவின் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த தற்போது பொலீசில் புகார் கொடுத்துள்ளார்கள்.

தற்போது சுஷ்மிதாவின் மாமா மற்றும் மைத்துனியை பொலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் சுஷ்மிதாவின் மாமா ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டுள்ளது…!
Previous Post Next Post