உங்க வேலைய போய் பாருங்க! ... லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா கொடுத்துள்ள பதிலடி

வனிதாவின் திருமணம் தொடர்பில் கேள்வியெழுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணாவுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல நடிகை வனிதாவுக்கும், பீட்டர் பால் என்பவருக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது.திடீர் திருப்பமாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் (41), வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளன. என்னிடம் விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணம் செய்துள்ளார் என கூறியிருந்தார்.

இது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டரில், செய்தியை இப்போதுதான் பார்த்தேன். அந்த மனிதருக்கு ஏற்கெனவே திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளன.

விவாகரத்து ஆகவில்லை. படிப்பும் அனுபவமும் கொண்ட ஒருவர் எப்படி இந்தத் தவறைச் செய்ய முடியும்? அதிர்ச்சியடைந்துள்ளேன் என கூறியிருந்தார்.

இதற்கு வனிதா கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் லட்சுமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், உங்களுடைய ட்வீட்களை நீக்குங்கள். உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். நீங்கள் ஒன்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலோ குடும்பத்தைக் கெடுக்கும் உங்களுடைய நிகழ்ச்சியிலோ இல்லை.

நான் நன்குப் படித்தவர். சட்டரீதியான அறிவு கொண்டவர். யாருடைய ஆதரவின்றியும் என் வாழ்க்கையை என்னால் பார்த்துக்கொள்ள முடியும். என்னுடைய முடிவுகளுக்கு உங்களுடைய ஆதரவோ அங்கீகாரமோ எனக்கு அவசியம் கிடையாது.

பலாத்காரம் மற்றும் தற்கொலை பற்றி பேசுவதையே தொடர்ந்து செய்யுங்கள். குடும்ப பிரச்சினைகளை அவர்களின் அனுமதியின்றி விவாதிப்பதை நிறுத்துங்கள்

2 பேர் ஏன் பிரிந்து செல்கிறார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்கு இதில் சம்மந்தம் இல்லை, நான் கூட அவர்களின் தனிப்பட்ட விடயத்தில் தலையிடவில்லை.

உங்களுக்கு உண்மையிலேயே என் மீது அக்கறை இருந்தால் இதை எனக்கு போன் செய்து கூறியிருப்பீர்கள், இப்படி பொதுவெளியில் பேசி பப்ளிசிட்டி தேடி கொண்டிருக்க மாட்டீர்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post