ரொறன்ரோவில் கருப்பினப்பெண் ஒருவர் இன ரீதியாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை ஊழியரான Dionne Samantha Callaghan, பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக ரயிலில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது, அவருக்கு எதிரே தன் மகனுடன் அமர்ந்திருந்த பெண் ஒருவர், Samanthaவை இன ரீதியாக விமர்சித்தவண்ணம் இருந்துள்ளார்.

அதில் உச்சகட்டமாக தன் மகன் கையிலிருந்த மார்க்கர் பேனாவை வாங்கி கருப்பினத்தவரை இன ரீதியாக விமர்சிக்கும் வார்த்தை ஒன்றை அவரது கண்ணுக்கு முன்பாக ரயிலின் ஜன்னல் அருகே எழுதிவிட்டு, அவரை நோக்கி விரலைச் சுட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இருவர் சாட்சியமளிக்க முன்வர, தகவல் அறிந்ததும், அந்த ரயில் சேவையிலிருந்து அகற்றப்பட்டு ஷெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது.
இதற்கிடையில், காவல்துறையினர் இன ரீதியான தாக்குதல் நடத்திய அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
கைதான பெண் மீது தற்போதைக்கு பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் மற்றும் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
இதுவரை அவர் மீது இனவெறுப்பு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. அந்த பெண்ணின் பாதுகாப்பு கருதி அவர் பெயரையும் பொலிசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.